Oct 16, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐத் தாண்டினால் பள்ளிகள் மூடப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐத் தாண்டினால் பள்ளிகள் மூடப்பட வேண்டும்

புகைமூட்டம் நீடிக்கும் நிலையில், காற்று மாசுக் குறியீடு 200-ஐத் தாண்டினால் பள்ளிகள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

குறியீடு 200-ஐத் தாண்டும்போது வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் பொதுக் கூட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும். குறியீடு 101 முதல் 200 வரை பதிவானால், கல்வி நிறுவனங்கள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள், முதியோர் பராமரிப்பு நிலையங்களில் வெளிப்புற உடற்பயிற்சிகள் மற்றும் இணைப்பாட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும்.

மேலும், வெளியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முதலாளிகள் N95 முகக்கவசங்களை வழங்க வேண்டும் என்றும், பொதுமக்களும் வெளியில் செல்லும்போது அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் இதயம் அல்லது சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் புகைமூட்டத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்பதால், அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →