Oct 16, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் பள்ளிகளில் மர்மப் பொட்டலங்கள்! வெடிகுண்டு அச்சத்தால் பரபரப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் பள்ளிகளில் மர்மப் பொட்டலங்கள்! வெடிகுண்டு அச்சத்தால் பரபரப்பு

நெகிரி செம்பிலானில் உள்ள பல பள்ளி வளாகங்களில் சந்தேகத்துக்கிடமான பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இன்று பரபரப்பு ஏற்பட்டது. எனினும், அவற்றில் கோதுமை மாவும் பிளாஸ்டிக் தட்டுகளுமே இருந்தது வெடிகுண்டு அகற்றும் பிரிவினரின் சோதனையில் தெரியவந்தது.

நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் கூறுகையில், நீலாய் பகுதியில் ஐந்து புகார்களும் தம்பின் பகுதியில் நான்கு புகார்களும் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

பொட்டலங்களில் வெடிபொருட்களோ ஆபத்தான பொருட்களோ இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பொட்டலங்களை அனுப்பியது யார், எதற்காக அனுப்பினர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →