Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூர் பாருவில் பெரும் மின்தடை! ஆயிரக்கணக்கானோர் இருளில் தவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூர் பாருவில் பெரும் மின்தடை! ஆயிரக்கணக்கானோர் இருளில் தவிப்பு

ஜோகூர் பாருவில் இன்று மாலை ஏற்பட்ட பெரும் மின்தடையால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஜோகூர் ஜெயா, மவுண்ட் ஆஸ்தின், தாமான் காயா, உலு திராம் உள்ளிட்ட பல பகுதிகளில் மாலை 6 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின்தடையால் குடியிருப்புப் பகுதிகள் மட்டுமின்றி, போக்குவரத்து விளக்குகளும் பாதிக்கப்பட்டதால் முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.

மின்சார விநியோகத்தைச் சீரமைக்க தெனாகா நேஷனல் பெர்ஹாட்டான டிஎன்பி நடவடிக்கை எடுத்தது. எனினும், மின்தடைக்கான காரணம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் விநியோகம் முழுமையாகச் சீரடைந்ததா என்பது குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →