Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையில் லாரி மோதல்! ஜேபிஜே அதிகாரி பலி; மற்றொருவர் படுகாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையில் லாரி மோதல்! ஜேபிஜே அதிகாரி பலி; மற்றொருவர் படுகாயம்

நெகிரி செம்பிலானில், வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையில் லாரி மோதிய விபத்தில் சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு அதிகாரி படுகாயமடைந்தார்.

நேற்று இரவு 10.30 மணியளவில், செனாவாங் வெளியேறும் பாதைக்கு அருகே 256.1ஆவது கிலோமீட்டரில், அவசரப் பாதையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

மாநில போலீஸ் தலைவர் அல்ஸாஃப்னி அஹ்மாட் கூறுகையில், உலர் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, ஜேபிஜே அதிகாரிகளின் காரையும், அவர்கள் சோதனையிட்ட வாகனத்தையும் மோதியதாகத் தெரிவித்தார். உயிரிழந்த அதிகாரிக்கு 42 வயது. காயமடைந்த 32 வயது அதிகாரி உட்பட மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →