Mar 28, 2026
Thisaigal NewsYouTube
குஜராத், ஆமதாபாத்திற்கான மலேசிய விமானச் சேவையில் மாற்றமில்லை
தற்போதைய செய்திகள்

குஜராத், ஆமதாபாத்திற்கான மலேசிய விமானச் சேவையில் மாற்றமில்லை

Share:

கோலாலம்பூர், ஜூன்.13-

ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து விபத்து நடந்த இடமான குஜராத், ஆமதாபாத்திற்கான மலேசிய விமானச் சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்று மலேசிய விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தற்போது குஜராத், ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அனைத்துலக சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசிய ஏர்லைன்சும், ஏர் ஆசியாவும் விமானச் சேவையை மேற்கொண்டு வருகின்றன.

நேற்று பிற்பகலில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து அந்த விமான நிலையம் தற்காலிமாக மூடப்பட்டது. எனினும் சில மணி நேரங்களுக்குப் பிறகு அது மீண்டும் திறக்கப்பட்டு விட்டதால், மலேசிய விமானச் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோலாலம்பூருக்கும் ஆமதாபாத்திற்கும் ஏர் ஆசியா, வாரத்திற்கு 5 விமானச் சேவைகளையும், மலேசிய ஏர்லைன்ஸ், வாரத்திற்கு 8 நேரடி விமானச் சேவைகளையும் வழங்கி வருகின்றன.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை