Jul 6, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா நிர்வாகம் இனி டிஜிட்டல் மயம்: அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அதிரடி
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா நிர்வாகம் இனி டிஜிட்டல் மயம்: அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அதிரடி

Share:

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கோட்டா நிர்வாகம் முழுமையாக மனிதவள அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். இனி விண்ணப்பங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறை மூலமாக மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும், இடைத்தரகர்களின் தலையீட்டையோ அல்லது பரிந்துரைகளையோ தவிர்க்கும் பொருட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலாளிகள் இனி தங்களின் கோட்டா விண்ணப்பங்களை எஃப்.டபிள்யூ.சி.எம்.எஸ் அமைப்பில் உள்ள 'இ-கோட்டா' பிரிவு மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இதில் எந்தவொரு சிறப்பு அனுமதியும் கிடையாது என்றும், அமைச்சரையோ அல்லது அதிகாரிகளையோ நேரில் சந்தித்து ஒப்புதல் பெறும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் இனி அனைத்தும் கணினி மூலமாகவே நடக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், 2030-ஆம் ஆண்டிற்குள் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 10 சதவீதமாகக் குறைக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே, முதலாளிகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக, உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அமைச்சர் ரமணன் வலியுறுத்தினார். வேலைவாய்ப்புச் சட்டம் 1955-இன் பிரிவு 60K மற்றும் 'மைஃபியூச்சர்ஜாப்ஸ் போர்ட்டல் மூலம் உள்ளூர்வாசிகளை வேலைக்கு அமர்த்த முயன்றும் ஆட்கள் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே இந்த டிஜிட்டல் அமைப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News