Sep 24, 2026
Thisaigal NewsYouTube
மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் 3 கிலோ ஹெராயின் கடத்திய மலேசிய இளைஞர் கைது
தற்போதைய செய்திகள்

மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் 3 கிலோ ஹெராயின் கடத்திய மலேசிய இளைஞர் கைது

Share:

மக்காவ் 2.09 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3 கிலோகிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தியதாகக் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட 24 வயது சரவாக் இளைஞருக்கு, ஏற்கனவே மலேசியாவிலும் போதைப்பொருள் குற்றப் பின்னணி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த இளைஞர் மக்காவ் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது, டூனா பேஸ்ட் டின்ற்குள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அங்குள்ள போலீசார் கண்டுபிடித்தனர்.

வெறும் 3,000 ரிங்கிட் பணத்திற்கு ஆசைப்பட்டு, மலேசியக் கடத்தல் கும்பலால் போதைப்பொருள் கடத்தல்காரராக இந்த இளைஞர் பயன்படுத்தப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கியக் குற்றவாளிகளைக் கண்டறிய மக்காவ் போலீசாருடன் இணைந்து புக்கிட் அமான் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News