Jul 6, 2026
Thisaigal NewsYouTube
சட்டமன்றத் தேர்தல்: ஜசெக சார்பில் 8 ஆற்றல் வாய்ந்த பெண் வேட்பாளர்கள் களம் – தியோ நி சிங் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

சட்டமன்றத் தேர்தல்: ஜசெக சார்பில் 8 ஆற்றல் வாய்ந்த பெண் வேட்பாளர்கள் களம் – தியோ நி சிங் கூறுகிறார்

Share:

வரும் சனிக்கிாமை நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஜசெக உரிய முன்னுரிமை வழங்கியுள்ளதாக அதன் மாநிலத் தலைவரும், தொடர்புத்துறை துணை அமைச்சருமான தியோ நி சிங் தெரிவித்துள்ளார். பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் கீழ் ஜசெக போட்டியிடும் 17 தொகுதிகளில், 8 ஆற்றல் வாய்ந்த பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பது ஒரு முக்கிய மைல்கல் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இம்முறை அனுபவமிக்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களோடு புதிய முகங்களையும் ஜசெக களமிறக்கியுள்ளது. வேட்பாளர்களின் சராசரி வயது 40 ஆக உள்ளதால், இது இளமைத் துடிப்புள்ள மிகச் சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. உள்ளூர் மக்களுக்கு நன்கு அறிமுகமான, இன-மத வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் சேவையாற்றக்கூடிய தகுதியான வேட்பாளர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் தியோ நி சிங் விவரித்தார்.

மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் ஒரே திசையில் பயணித்து, ஜோகூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிப்படுத்த மக்கள் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றும் தியோ நி சிங் வலியுறுத்தினார்.

Related News

அன்வார் எச்சரிக்கைக்குப் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் ஃபத்லி கேள்வி

அன்வார் எச்சரிக்கைக்குப் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் ஃபத்லி கேள்வி

புத்திரி வங்சா தொகுதியில் மஸ்லீ மாலிக்கிற்கு இந்தியர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு அமோகம்

புத்திரி வங்சா தொகுதியில் மஸ்லீ மாலிக்கிற்கு இந்தியர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு அமோகம்

மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் 3 கிலோ ஹெராயின் கடத்திய மலேசிய இளைஞர் கைது

மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் 3 கிலோ ஹெராயின் கடத்திய மலேசிய இளைஞர் கைது

இடைநிலைப்பள்ளியில் கத்திக்குத்து: அதிர்ச்சியில் உள்ள மாணவர்களுக்கு ஆறுதல் கூற ஆலோசகர்கள் குழு வருகை

இடைநிலைப்பள்ளியில் கத்திக்குத்து: அதிர்ச்சியில் உள்ள மாணவர்களுக்கு ஆறுதல் கூற ஆலோசகர்கள் குழு வருகை

எரிபொருள் மானியக் கோட்டாவை ரத்து செய்ய ஓன் ஹபீஸ் காசி வலியுறுத்து

எரிபொருள் மானியக் கோட்டாவை ரத்து செய்ய ஓன் ஹபீஸ் காசி வலியுறுத்து

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்