Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கைது
தற்போதைய செய்திகள்

பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கைது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

தலைநகர் கோலாலம்பூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரைக் காவற்படையினர் கைது செய்துள்ளனர். ஜாலான் சுங்கை பீசியில் உள்ள ஒரு வங்கிக்கு முன்பாக கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி பிடிபட்ட அந்த நபர் மீது, இதுவரை ஆறு புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அவர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என டாங் வாங்கி காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் சஸாலி அடாம் தெரிவித்தார்.

இந்தப் புகார்கள் தொடர்பாக Jalan Duta Majistret நீதிமன்றத்தில் அவர் மீது ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சமூக வலைதளங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பகிரப்பட்டு வருகிறது.

Related News

பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கைது | Thisaigal News