Sep 27, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் 5 மில்லியன் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய்: சுகாதார அமைச்சர் கவலை
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் 5 மில்லியன் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய்: சுகாதார அமைச்சர் கவலை

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.11-

மலேசியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட சிறுநீரக நோய் – CKDயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் 5 விழுக்காட்டினர் மட்டுமே தங்களுக்கு நோய் இருப்பதை உணர்ந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைக்கு அரசு ஆண்டுதோறும் சுமார் 3.3 பில்லியன் ரிங்கிட் செலவிடுவதாகவும், சர்க்கரை நோய் அதிகரிப்பதே இந்த நிலைக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதைக் கட்டுப்படுத்த சர்க்கரை பானங்களுக்கான வரியை உயர்த்தி, அந்த நிதியைக் கொண்டு நவீன மருந்துகளை வழங்குவதோடு, நோயாளிகள் வீட்டிலேயே டயாலிசிஸ் செய்து கொள்ளும் 'PD-First' கொள்கையை அரசு ஊக்குவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News