Sep 24, 2026
Thisaigal NewsYouTube
பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி
தற்போதைய செய்திகள்

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

Share:

ஜோகூரில் உள்ள மாரா இளையோர் அறிவியல் கல்லூரி பகடிவதை சம்பவத்தில் தொடர்புடைய ஆறு மாணவர்களில் நான்கு பேர் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக மாரா தலைவர் அஷ்ரப் வஜ்டி துசுகி உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ள தகவலில், கல்லூரி ஒழுங்கு நடவடிக்கைக் குழு இன்று கூடி ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மீதமுள்ள இரு மாணவர்கள் பகடிவதை சம்பவத்தில் தொடர்புடையவர்களா? என்பதை போலீஸ் விசாரணை மூலம் உறுதி செய்யும் வரை, அவர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூவாரில் உள்ள மாரா இளையோர் கல்லூரில் 14 வயது மாணவரை பகடிவதை செய்தது தொடர்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 வயதுடைய 6 மாணவர்கள் கைது செய்யப்படனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர... | Thisaigal News