Jul 18, 2026
Thisaigal NewsYouTube
யானைக் குட்டி மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது – ஓட்டுநர் காயம்
தற்போதைய செய்திகள்

யானைக் குட்டி மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது – ஓட்டுநர் காயம்

Share:

ஜோகூர் மாநிலம் மெர்சிங் பகுதியில் யானைக் குட்டி மீது கார் மோதியதில், கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஓட்டுநர் காயமடைந்தார்.

இச்சம்பவம் குறித்து இன்று அதிகாலை 2.28 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாக மெர்சிங் தீயணைப்பு நிலையத் தலைவர் முகம்மது அலியாஸ் உசேன் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்தில் காருக்குள் சிக்கியிருந்த ஓட்டுநரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு வெளியேற்றினர்.

காலில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மெர்சிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எனினும், விபத்திற்குள்ளான யானைக் குட்டியின் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related News