Sep 27, 2026
Thisaigal NewsYouTube
எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்த வேண்டும்: துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசோஃப் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்த வேண்டும்: துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசோஃப் வலியுறுத்தல்

Share:

லுபோக் அந்து, ஏப்ரல்.11-

கடுமையான வானிலை மாற்றங்களால் அணைகளின் நீர் மட்டம் குறைந்து வருவதால், மின்சார விநியோகத்தைப் பாதுகாக்க நீர் மின் சக்தியைத் தாண்டி இதர எரிசக்தி ஆதாரங்களை மலேசியா பன்முகப்படுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார். Batang Ai நீர்மின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சூரிய ஆற்றல் திட்டத்தைப் பார்வையிட்ட அவர், மழைப் பொழிவு குறைந்த காலங்களில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க சூரிய சக்தி, காற்றாலை, உயிரி எரிபொருள் போன்ற மாற்று வழிகளை வலுப்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டார்.

கூட்டரசும் மாநில அரசாங்கங்களும் இணைந்து இத்தகைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம், எதிர்கால மின்சாரத் தேவையைத் தடையின்றி நிறைவு செய்வதுடன் உலகளாவிய எரிசக்தி சந்தையில் மலேசியா போட்டியிட முடியும் என்றும் அவர் கூறினார்.

Related News