Sep 27, 2026
Thisaigal NewsYouTube
கார்ப்பரேட் மாஃபியா: குற்றவாளிகளை நாடு கடத்தக் காவற்படை நடவடிக்கை – அமைச்சர்
தற்போதைய செய்திகள்

கார்ப்பரேட் மாஃபியா: குற்றவாளிகளை நாடு கடத்தக் காவற்படை நடவடிக்கை – அமைச்சர்

Share:

பெங்காலான் உலு, ஏப்ரல்.11-

கார்ப்பரேட் நிறுவனங்களைக் கையாளுதல், முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களை, சட்டப்படியான அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி நாடு கடத்தி வரப் போவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். தற்போது இச்சம்பவம் குறித்து பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவற்படை தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் முக்கிய நபர்களிடம் வாக்குமூலம் பெறுவது விசாரணையை நிறைவு செய்ய அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, இந்த முறைகேட்டில் தொடர்புடையதாகக் கருதப்படும் தொழிலதிபர் விக்டர் சின் தற்போது வெளிநாட்டில் உள்ள நிலையில், அவரை மீண்டும் மலேசியாவிற்குக் கொண்டு வரத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் காவற்படை மேற்கொள்ளும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Related News

கார்ப்பரேட் மாஃபியா: குற்றவாளிகளை நாடு கடத்தக் காவற்படை ந... | Thisaigal News