Jul 1, 2026
Thisaigal NewsYouTube
13-ஆவது மாடியிலிருந்து கல் வீசிய சிறுவன்: காவற்படை  விசாரணை
தற்போதைய செய்திகள்

13-ஆவது மாடியிலிருந்து கல் வீசிய சிறுவன்: காவற்படை விசாரணை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

தலைநகரில் அமைந்துள்ள ஸ்ரீ மலேசியா அடுக்குமாடி குடியிருப்பின் 13-ஆவது மாடியிலிருந்து கற்களையும் பிளாஸ்டிக் நாற்காலிகளையும் வீசிய 13 வயது சிறுவனிடம் காவற்படையினர் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை குடியிருப்பாளர் சங்கத் தலைவரால் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, அந்தச் சிறுவன் தனது பெற்றோருடன் காவல் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் அளித்துள்ளதாக செராஸ் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் முஹமட் ரொஸ்டி டாவுட் தெரிவித்தார்.

சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவிய இந்தச் செயலால் குடியிருப்பாளர்களிடையே அச்சம் ஏற்பட்ட போதிலும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதைக் காவற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related News