Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பொது மக்களின் அடையாள கார்ட்டை வாங்குவதற்கோ, வைத்திருப்பதற்கோ பாதுகாவலர்களுக்கு அதிகாரமில்லை: தேசிய பதிவு இலாகா திட்டவட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பொது மக்களின் அடையாள கார்ட்டை வாங்குவதற்கோ, வைத்திருப்பதற்கோ பாதுகாவலர்களுக்கு அதிகாரமில்லை: தேசிய பதிவு இலாகா திட்டவட்டம்

கோலாலம்பூர், ஜூன்.10-

பொது மக்களின் அடையாளக் கார்டான மைகாட் அட்டையைக் கேட்டு வாங்குவதற்கோ அல்லது வைத்திருப்பதற்கோ பாதுகாவலர்களுக்கு அதிகாரமில்லை என்று தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

1990 ஆம் ஆண்டு தேசிய பதிவு இலாகா சட்டத்தின் கீழ் 5 தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொதுமக்களின் அடையாளக் கார்ட்டை வாங்கிப் பார்ப்பதற்கும், சோதிப்பதற்கும் அதிகாரம் உள்ளது என்று ஜேபிஎன் குறிப்பிட்டுள்ளது.

ஜேபிஎன் அதிகாரிகள், போலீசார், சுங்கத் துறையினர், கடமையில் உள்ள இராணுவத்தினர் மற்றும் தேசிய பதிவு இலாகா தலைமை இயக்குநரால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அரசாங்க அதிகாரிகள் ஆகியோருக்கு மட்டுமே ஒருவரின் அடையாளக் கார்ட்டை வாங்கிப் பார்ப்பதற்கு அதிகாரம் உள்ளது என ஜேபிஎன் தெளிவுபடுத்தியுள்ளது.

அடையாளக் கார்ட்டை கேட்டு வாங்கிப் பார்ப்பது, வைத்திருப்பது மற்றும் அதனை உள்ளீடு செய்வது முதலிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாதுகாவலருக்கு அதிகாரமில்லை. அவ்வாறு செய்வது சட்டத்தை மீறியச் செயலாகும். அதற்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஜேபிஎன் விளக்கம் அளித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு