சாலைத் தடுப்பு காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து அதிகாரி மீது 25 வயது மதிக்கத்தக்க ஆடவர் மோதி அதிகாரிக்கு காயத்தை விளைவித்துள்ளார். தலை, கை கால்களில் காயம் ஏற்பட்ட போக்குவரத்து அதிகாரி போர்ட்டிக்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறு காயங்களுடன் உயிர் தப்பி உள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநில போக்குவரத்து அதிகாரிகள் சிரம்பான் போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் போட்ட சாலை தடுப்பு காவலிருந்து விடுபட வேகமாக வந்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டினர் காவலில் நின்றுக் கொண்டிருந்த அதிகாரியை மோதியதில் அதிகாரிக்கு காயங்கள் ஏற்பட்டன என நெகிரி செம்பிலான் போக்குவரத்து இலாகா செய்தி வெளியிட்டுள்ளது.
மோதிய அந்த 25 வயது ஆடவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தனது லைசன்சை புதிப்பிக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.








