Sep 22, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Share:

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.02-

சிலாங்கூர் மாநிலம் சுங்கை பூலோ பகுதியில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017-இன் பிரிவு 14(A)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Hafiz Muhammad Nor தெரிவித்துள்ளார்.

கடை ஒன்றில் இரண்டு சிறுமிகளை அணுகிய நபர், அவர்களில் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளியை விரைந்து கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளி... | Thisaigal News