மூவார், பாரிட் அமாட் லாட், பகுதியில் அண்டை நாட்டிற்கு கடத்த முயன்ற 57.15 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களுடன் 63 வயது முதியவர் மற்றும் 43 வயது பெண் ஆகிய இருவர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
கடல் போலீஸ் பிரிவு பிராந்தியம் 2-இன் தலைவர் நூர் அஸ்மான் ஜமால் கூறுகையில், சந்தேகத்திற்கிடமான முறையில் படகில் பொட்டலங்களை ஏற்றிக்கொண்டிருந்த போது இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது என்றார்.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 549 கிலோ ஷாபு, ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 268 எக்ஸ்டசி மாத்திரைகள், 4 ஆயிரம் போதைப்பொருள் திரவக் குப்பிகள் ஆகியவை படகிலும், காரின் பின் பகுதியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் ஒரு படகும், இரண்டு எஞ்சின்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.








