Sep 7, 2026
Thisaigal NewsYouTube
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு போதைப்பொருள் சோதனை நிறைவு: விமானப் பணியாளர்களுக்கு அடுத்தகட்ட சோதனை
தற்போதைய செய்திகள்

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு போதைப்பொருள் சோதனை நிறைவு: விமானப் பணியாளர்களுக்கு அடுத்தகட்ட சோதனை

Share:

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அனைத்து பணியில் உள்ள விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமம் அறிவித்துள்ளது.

அனைத்து பரிசோதனை முடிவுகளும் எதிர்மறையாக வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிறைவடைந்த இந்த முதற்கட்ட சோதனையில், மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அனைத்து செயல்பாட்டிலுள்ள விமானிகளும் பரிசோதிக்கப்பட்டனர்.

அடுத்ததாக, சுமார் 2,840 விமானப் பணியாளர்களுக்கும், வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், சகோதர நிறுவனமான ஃபயர் ஃபலாய்-யிலும் பரிசோதனை நடைபெற்று வருகின்றது.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிலவரப்படி 158 விமானிகள் மற்றும் 163 விமானப் பணியாளர்களில் பெரும்பான்மையானோரும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளன.

முதற்கட்ட சோதனை நிறைவடைந்தது முக்கியமான நடவடிக்கை என்றாலும், தங்களது பணிகள் இத்துடன் நிறைவடையவில்லை என அக்குழுமத்தின் கேப்டன் நஸருத்தீன் ஏ. பக்கார் தெரிவித்துள்ளார்.

மேலும், நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியல் குழு தலைமையில் தொடர்ந்து போதைப்பொருள் சோதனைகள் நடத்தப்படும் என்றும் அக்குழும் தெரிவித்துள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து