Sep 14, 2026
Thisaigal NewsYouTube
பசீர் கூடாங்கில் இரசாயனக் கழிவுத் தொட்டியில் விழுந்து 26 வயது தொழிலாளி பலி
தற்போதைய செய்திகள்

பசீர் கூடாங்கில் இரசாயனக் கழிவுத் தொட்டியில் விழுந்து 26 வயது தொழிலாளி பலி

Share:

ஜோகூர் மாநிலம், பாசீர் கூடாங்கில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் 20 அடி உயரமுள்ள இரசாயனக் கழிவுத் தொட்டியில் தவறி விழுந்த 26 வயது தொழிலாளி உயிரிழந்தார்.

நேற்று இரவு 9.51 மணியளவில் மெட்டல் ஹைட்ராக்சைடு ஸ்லட்ஜ் டேங்க் எனப்படும் இரசாயனக் கழிவுத் தொட்டியில் அவர் விழுந்ததாக பசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கைக் குழு தளபதி ஃபிர்தௌஸ் அஹமத் தெரிவித்துள்ளார்.

அவசர அழைப்பு கிடைத்த நான்கு நிமிடங்களிலேயே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சுமார் 1.5 மீட்டர் ஆழத்தில் இருந்த தொழிலாளியின் உடலை மீட்க சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன.

அதேவேளையில், சம்பவ இடத்திலேயேதொழிலாளி உயிரிழந்ததை மருத்துவ அதிகாரி உறுதி செய்தார்.

அவரது சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்

Related News