Jun 24, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் கேலிச்சித்திரம்: 280 புகார்கள் பதிவு
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் கேலிச்சித்திரம்: 280 புகார்கள் பதிவு

Share:

சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுதீன் இட்ரிஸ் ஷாவை அவமதிப்பதாகக் கருதப்படும் இணைய கேலிச்சித்திரம் தொடர்பாக, இதுவரை மொத்தம் 280 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் சாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி பதிவேற்றப்பட்ட இந்த கார்ட்டூன் குறித்து நாடு முழுவதும் பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து, தங்களது புகார்களை அளித்துள்ளனர்.

இது மிகவும் தீவிரமான தூண்டுதல் செயலாகக் கருதப்படுவதாக சாசெலி கஹார் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவமானது, சமூக அமைதிக்கும், அரச மரியாதைக்கும் எதிரானதாக பார்க்கப்படுவதால், அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, 1998-ஆம் ஆண்டின், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், பிரிவு 233, 1948-ஆம் ஆண்டின் தேச நிந்தனைச் சட்டம், பிரிவு 4(1), மற்றும் 1955-ஆம் ஆண்டின் சிறிய குற்றங்கள் சட்டம், பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெற்று வருகின்றது.

Related News