Oct 10, 2026
Thisaigal NewsYouTube

14 வயது பெண்ணை மானபங்கம் செய்ததாக முதியவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
14 வயது பெண்ணை மானபங்கம் செய்ததாக முதியவர் மீது குற்றச்சாட்டு

மலாக்கா, ஜூன்.09-

ஒரு இருதய நோயாளியான 70 வயது முதியவர் ஒருவர், 14 வயது பெண்ணை மானபங்கப்படுத்தியதாக மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஜாஃபார் தையிப் என்ற அந்த முதியவர் நீதிபதி ஹெடேரியா சிரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலாக்கா தெங்கா மாவட்டத்தில் உள்ள கிளேபாங், வீடமைப்புப் பகுதியில் அந்த முதியவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த முதியவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →