Dec 4, 2025
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கி, 16 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட 7 சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் போதைப்பொருள் விநியோகிப்பில் ஈடுபட்டு வந்த 7 கும்பல்களை அரச மலேசியப் போலீஸ் படை முறியடித்துள்ளது.

இந்த சோதனைகளின் வாயிலாக ஒரு கோடியே 28 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ எஸ். சசிகலா டேவி தெரிவித்துள்ளார்.

இந்த 7 கும்பல்கள் முறியடிக்கப்பட்டது மூலம் 21 க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரண்டு பெண்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோ எஸ். சசிகலா டேவி குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஷா ஆலமில் சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ எஸ். சசிகலா டேவி இதனை தெரிவித்தார்.

ஷா அலாம், காஜாங், சுபாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா, செபாங் மற்றும் கே.எல்.ஐ.ஏ விமான நிலையம் ஆகிய இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட கும்பல்களிடமிருந்து பெரியளவில் போதைப்பொருள், வாகனங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்களில் இருவர் இலங்கைப் பிரஜைகள் ஆவர் என்று டத்தோ எஸ். சசிகலா டேவி மேலும் கூறினார்.

Related News