Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இரு காற்பந்து வீரர்களுக்கும் நிகழ்ந்த சம்பவம் ஒன்றல்ல
தற்போதைய செய்திகள்

இரு காற்பந்து வீரர்களுக்கும் நிகழ்ந்த சம்பவம் ஒன்றல்ல

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 06-

குறுகிய காலத்தில், இரண்டு பிரபல தேசிய காற்பந்து வீரர்களுக்கு நிகழ்ந்த சம்பவம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது அல்ல என்று தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் பின்னணி காரணங்களை ஆராய்வதற்கு பாதிக்கப்பட்ட இருவருடைய வாக்குமூலங்களை போலீசார் பெற்று வருவதாக புக்கிட் அமான் குற்றப் புலனா‌ய்வு துறை கூறுகின்றது.

இது தொடர்பான விசாரணை இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதுடன், இதன் நோக்கம் மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக அது அறிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை கோலா திரங்கானு- வில் தேசிய வீரர் மற்றும் திரங்கானு FC ஆன அக்யார் ரஷீத், ஆசாமிகளால் ஆயுதங்களை கொண்டு தாக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று மாலை 5 மணியளவில் பெட்டாலிங் ஜெயா- வில் உள்ள ஒரு சந்தையில் சிலாங்கூர் FC மற்றும் தேசிய அணியின் நட்சத்திரமான பைசால் ஹலீம், அடையாளம் தெரியாத நபர்களால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்