May 22, 2026
Thisaigal NewsYouTube
பல்கலைக்கழக மாணவனின் உடல் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பல்கலைக்கழக மாணவனின் உடல் மீட்கப்பட்டது

Share:

Sarawak, Kota Samarahan, மலேசிய சரவாக் பல்கலைக்கழகத்தில் உள்ள ஏரியில் மாணவன் ஒருவன் மூழ்கி உயிரிழந்தார்.

20 வயது Zoolfazairy Zaharen என்ற அந்த மாணவனின் உடல் ஏரியை கடந்து செல்லும் Jambatan Cinta - விற்கு அருகில் மிதந்து கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இன்று காலை 8.32 மணியளவில் இச்சம்பவத்தை குறித்து தமது தரப்புக்கு தகவல் கிடைக்க பெற்றதாக Sarawak, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அம்மாணவன் உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதை அடுத்து, அவரின் உடல் சவப் பரிசோதனைக்காக Sarawak மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News