Sep 24, 2026
Thisaigal NewsYouTube
எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

Share:

இவ்வாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ எல் நினோ தீவிரமடைந்தால், மலேசியாவில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா எச்சரித்துள்ளது.

கடந்த கால வானிலைப் பதிவுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதங்கள் வரை நாட்டின் மிகவும் வெப்பமான காலமாக இருக்கும்.

இந்தக் காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசைத் தாண்டுவது வழக்கமான ஒன்றாகும் என்று மெட்மலேசியா தலைமை இயக்குநர் ஹிஷாம் அனிப் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முறை வலுவான எல் நினோ உருவாகும் என்ற முன்னறிவிப்பும், உலக வெப்பமயமாதலின் தாக்கமும் அதிகரித்து வருவதால், 2027 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மாதங்களுக்கு இடையில் மலேசியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும் சாத்தியம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News