Sep 24, 2026
Thisaigal NewsYouTube
சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை
தற்போதைய செய்திகள்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

Share:

2026ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள இணையக் குற்றச் சட்டத்தின் கீழ், அதிகாரிகளுக்கு வரம்பற்ற அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சட்டம் நல்ல விஷயங்களுக்காகக் கொண்டு வரப்பட்டிருந்தாலும், உண்மைகளைப் பேசும் பொதுமக்களுக்கு எதிராக இது தவறாகப் பயன்படுத்தக் கூடாது. எனவே, அதற்கு முறையான கட்டுப்பாடுகள் அவசியம் என்று பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் அஃப்னான் ஹமீமி தாயிப் அசாமுதீன் கூறியுள்ளார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் போலியாக உருவாக்கப்படும் செய்திகள் மற்றும் அந்தரங்கப் படங்கள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்காக 61 பிரிவுகளுடன் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம், நாடாளுமன்றத்தில் பெரும்பாலானவர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, இந்தச் சட்டம் அதிகாரிகளுக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்துவிடவில்லை என்றும், பொதுமக்களின் தனிப்பட்ட ரகசியங்களைப் பாதுகாக்கக் கடுமையான சட்ட வழிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Related News