Sep 24, 2026
Thisaigal NewsYouTube
நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!
தற்போதைய செய்திகள்

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

Share:

நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு வருடத்திற்குச் சராசரியாக 32 கிலோ முதல் 97 கிலோ வரையிலான உணவை குப்பையில் கொட்டி வீணாக்குவதாகப் புள்ளிவிவர இலாகா அதிகாரி உசிர் மஹிதின் கூறியுள்ளார்.

சமைக்காத பச்சைப் உணவுகளை காட்டிலும், சமைத்து முடித்த உணவுகளையே மக்கள் அதிகளவில் குப்பையில் கொட்டுகின்றனர்.

இதில் சோறும் காய்கறிகளும்தான் மிக அதிகமாக வீணாகின்றன என்றும், உணவு காலாவதியாவது மற்றும் தேவைக்கு அதிகமாகச் சமைப்பது போன்ற தவறான பழக்கவழக்கங்களே இதற்கு முக்கியக் காரணங்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related News