Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

Share:

கெங் ஆர்டி6 என்ற ரகசியக் குற்றவியல் கும்பலில் உறுப்பினராக இருந்ததாகக் கூறி, 50 வயதுடைய வர்த்தகர் ர் ஒருவர் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இந்தச் சட்டவிரோதக் கும்பலில், செந்தூல் பகுதியில் உறுப்பினராக இருந்ததாக எஸ். அசோக் குமார் என்ற வர்த்தகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த தொழில் அதிபர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இவ்வழக்கு உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்குள் வருவதால், அவரிடம் எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. மேலும், அவருக்குப் பிணை வழங்க மறுத்த நீதிபதி முஹம்மது இல்மாமி வழக்கை வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஏற்கனவே கடந்த மே 25-ஆம் தேதி, இதே கும்பலைச் சேர்ந்த 11 ஆடவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

22 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஏ. ராஜரத்னம், கே. சுந்தரேசன், சி. விஐயகுமார், என். நடராஜா, டி. ராமன், ஆர். விஜயன், எம். குமரன், என். ஹரிசந்திரன், எஸ். மாறன், சுவரன் சிங், முகமட் அதிப் கான் ஆகியோர் இதே குற்றச்சாட்டின் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!