Jul 15, 2026
Thisaigal NewsYouTube
2 மலேசியர்கள் படுகாயமடைந்த தாய்லாந்து குண்டுவெடிப்பு - 40 வயது ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

2 மலேசியர்கள் படுகாயமடைந்த தாய்லாந்து குண்டுவெடிப்பு - 40 வயது ஆடவர் கைது

Share:

தாய்லாந்தின் நாரதிவாத் மாநிலம், தாக் பாய் பகுதியில் கடந்த திங்கள்கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் 40 வயது ஆண் ஒருவரை தாய்லாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை சுமார் 3.40 மணியளவில், தாக் பாய்யில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, வெடிகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொருட்கள், 10 கைக்கடிகாரங்கள் மற்றும் அதிகளவிலான மோட்டார் சைக்கிள் சைலன்சர் உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரண்டு மலேசியர்கள் காயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News