Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோபிந்த சி​ங் அரசியல் செயலாளராக சுரேஸ் சிங் நியமனம்
தற்போதைய செய்திகள்

கோபிந்த சி​ங் அரசியல் செயலாளராக சுரேஸ் சிங் நியமனம்

Share:

புத்ராஜெயா, ஏப்ரல் 20-

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளராக முன்னாள் செனட்டர் சுரேஷ் சிங் ரஷ்பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் கோபிந்த் சிங்கின் ​நீண்ட கால அரசியல் உதவியாளரான சு​ரேஷ் சிங், பதவி நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டதுடன் பதவி உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டார். பதவி உறுதிமொழி சடங்கு புத்ராஜெயபாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. பதவி உறுதி மொழி சடங்கில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும் கலந்து கொண்டார்.

​சுரேஷ் சிங், கடந்த பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் சிலாங்கூர் மாநிலத்தை பிரதிநிதித்து, 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் ஒரு தவணைக் காலத்திற்கு செனட்டராக பதவி வகித்து வந்துள்ளார். டிஏபி யைச் சேர்ந்த முன்னான் செனட்டர் சந்திரமோகனுக்கு பதிலாக சு​ரேஷ் சிங் செனட்டராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

சுரேஷ் ​சிங், அமைச்சர் கோபிந்த் சிங்கைப் பிரதிநிதித்து இந்தியர்கள் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இந்திய சமுதாயத்திற்கு சேர வேண்டிய உதவிகளையும், மானியங்களையும் பெற்று தருவதில் பெரும் பங்காற்றி வருகிறார். இந்த பதவி உறுதி மொழி சடங்கிற்கு பிறகு சுரேஷ் ​சிங்கிற்கு அமைச்சர் கோபிந்த் சிங் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டா​ர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்