அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய பசிபிப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டு அமைப்பான ஏபெக் ( APEC ) மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் தமது முடிவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறு உறுதி செய்துள்ளார்.
ஆசிய பசிபிக் நாடுகளுக்கான முக்கியத்துவம் வாய்ந்த அந்த உச்சநிலை மாநாட்டில் தாம் கலந்து கொள்ளும் நிலை ஏற்பட்ட போதிலும் பாலஸ்தீன மக்களின் போராட்டம் மீதான விவகாரத்தில் ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கை தாம் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று பிரதமர் சூளுரைத்துள்ளார்.
ஆசிய பசிபிப் நாடுகளுக்கு இடையில் பொருளாதார ரீதியில் கூட்டு ஒத்துழைப்பை கொண்டு இருப்பதற்காக ஏபெக் கூட்டமைப்பு , கடந்த 1989 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இம்மாநாடு, இம்முறை வரும் 11ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவிருக்கிறது.








