சீனப்புத்தாண்டை முன்னிட்டு நாளை பிப்ரவரி 8 ஆம் தேதி வியாழக்கிழமை, மறுநாள் பிப்ரவரி 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, 2 தினங்களுக்கு பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு டோல் கட்டணம் இலவசம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த டோல் கட்டண விலக்களிப்பு, தனிநபர் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சென்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் மக்களின் நலன் மற்றும் அவர்களின் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை கருத்தில் கொண்டு நாளை வியாழக்கிழமையும், மறுநாள் வெள்ளிக்கிழமையும் இந்த டோல் கட்டண விலக்களிப்பு வழங்கப்படுவதாக அமைச்சர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








