Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தூக்குத் தண்டனையிலிருந்து மூவர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

தூக்குத் தண்டனையிலிருந்து மூவர் தப்பினர்

Share:

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 9 கிலோ போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு அந்நியப் பிரஜைகள் உட்பட மூவர், இன்று தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினர்.

அந்த மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை தலா 15 ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டதுடன், தலா ஒருவருக்கு பத்து பிரம்படித் தண்டனைகளை விதிக்குமாறு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உள்ளூரை சேர்ந்த 43 வயது கே. தினகரன், ஒரு வங்காளதேசியான 28 வயது அஸ்ராபுல் அலாம் மற்றும் ஓர் இந்தியப் பிரஜையான 50 வயது எம். அறிவழகன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினக்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி ஹதரியா சையத் இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த மூவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி சிலாங்கூர், அம்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.

Related News