Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத்திறனாளிகள் மன நல பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்
தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் மன நல பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்

Share:

பட்டர்வெர்த்,பிப்.7
பினாங்கு பாலத்தில் தங்கள் மோட்டார் சைக்கிளை கடந்து செல்லும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளை எட்டி உதைத்து, அடாவடித்தனம் புரிந்த ஓர் ஆணும் பெண்ணும் மன நல சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ காவ் கொக் சின் தெரிவித்துள்ளார்.

அவ்விருவரும் புரிந்த இந்த ஆராஜக செயல் தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளான 30 வயது பெண்ணும் 50 வயது ஆணும் புரிய செயல் இன்னமும் குற்றத்தன்மையுடன் வகைப்படுத்தப் பட்டுள்ளதாக டத்தோ காவ் கொக் சின் குறிப்பிட்டார்.

இவர்கள் இருவரும் முந்தைய குற்றங்ளுக்கான போலீஸ் பதிவை கொண்டுள்ளனர் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News