Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கத்தின் ஆதரவு மீட்டுக்கொள்ளப்படாது
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை அரசாங்கத்தின் ஆதரவு மீட்டுக்கொள்ளப்படாது

Share:

துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிற்கு எதிரான 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்ட போதிலும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு டிஏபி வழங்கி வரும் ஆதரவு மீட்டுக்கொள்ளப்படாது என்று அதன் உதவித் தலைவர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்திற்கு தலைமையேற்றுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு, டிஏபி ஓர் விசுவாசமான கட்சியாகும். டிஏபி முக்கிய தோழமை கட்சி மட்டுமல்ல,அந்த கூட்டணியின் போராட்டத்தில் இரண்டறக் கலந்து விட்ட கட்சி என்று ஊராட்சித்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட் சம்பந்தப்பட்ட வழக்கில் உரிய விளக்கத்தை கேட்பதற்கு டிஏபி கடமைப்பட்டுள்ளது. அதற்காக ஒற்றுமை அரசாங்கத்திற்கு அது வழங்கி வந்த ஆதரவு மீட்டுக்கொள்ளப்படும் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று ங்கா கோர் மிங் விளக்கினார்.

Related News