பகாங், பெக்கான் ஸ்ரீ மக்மோர் குவந்தானில் நேற்று முன் தினம் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட பத்து வயது சிறுவனின் உடல் நேற்று மீட்கப்பட்டது. முகமட் அபிஸான் என்ற அந்தச் சிறுவனின் உடல் செம்பனைத் தோட்டத்தில் கிடந்தது. அந்த செம்பனைத் தோட்டத்தில் வெள்ளம் சூழ்ந்திருந்த நிலையில் சிறுவனின் உடல் செம்பனை மரத்தில் சிக்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.
நேற்று நண்பகர் 12.10 மணியளவில் தீயணைப்பு மீட்புத்துறை வீரர்கள் அந்தச் சிறுவனின் உடலை மீட்டனர். சிறுவனைத் தேடும் பணியில் கிராம மக்கள் உதவியதுடன் தீயணைப்புத்துறையினரின் K 9 மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.








