Mar 16, 2026
Thisaigal NewsYouTube
மேலும் ஒருவர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்
தற்போதைய செய்திகள்

மேலும் ஒருவர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்

Share:

கடந்த வாரம் பேரா, Bidor குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமிலிருந்து தப்பியோடிய 131 பேரி​ல், மேலும் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி மரணமுற்றார் என்று பேரா மாநில போ​லீஸ் தலைவர் Datuk Seri Mohd Yusri Hassan தெரிவித்துள்ளார்.

இந்த மரணமானது, தடுப்பு கைதிகள் விபத்தில் சிக்கிய இரண்டாவது சம்பவமாகும். நேற்று இரவு 9.20 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 332.5 ஆவது கிலோ ​மீ​ட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு கைதி மாண்டதாக அவர் குறிப்பிட்டார். கள்ளக்குடியேறிகளை உள்ளடக்கிய அந்த தடுப்பு முகாமிலிருந்து தப்பி ஓடிய 131 கைதிகளில் இதுவரை 54 பேர் பிடிப்பட்டுள்ளனர் என்று Mohd Yusri Hassan விளக்கினார்.

Related News