May 22, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் வழக்கில் தனபாலன் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் வழக்கில் தனபாலன் தேடப்படுகிறார்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 8 -

போதைப்பொருள் வழக்கில் முக்கிய சாட்சியான 45 வயது ர். தனபாலன் தற்போது தேடப்பட்டு வருவதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்கு விசாரணையில் தனபாலன் முக்கிய சாட்சியாக விளங்குகிறார் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ஷாஹுருல்னிசாம் ஜாபார் தெரிவித்துள்ளார்.

தனபாலன் சாட்சியாக அழைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வழக்கு விசாரணை வரும் மார்ச் 11,12 ஆகிய தேதிகளில் ஷா ஆலாம், உயர் நீதிமன்றம் குற்றவியல் நீதிமன்ற அறையில் நடைபெறவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தனபாலனை பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தந்து உதவிடுமாறு போலீஸ் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Related News