கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலின் தங்க விமான, வெள்ளி, பந்தன, அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் ஜுன் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.10 மணிக்கு மேல் பகல் 12.30 மணிக்குள் வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் இரண்டாம் கால யாக சாலை பூசை, தீப வழிபாடு, யந்திர ஸ்தாபனம் ஆகியவை சைவ சமய தத்துவார்த்தங்களில் பாண்டித்துவம் பெற்றவரான தமிழ்நாடு, பிள்ளையார் பட்டி சர்வசாதகம் சிவஸ்ரீ பிச்சைக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
தேவஸ்தானத்தின் முதன்மை குருக்களுடன் இணைந்து, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலின் ஏழாவது மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைப்பதற்காக வருகை தந்துள்ள - திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவிற்கு பிரசித்திப்பெற்றவருமான சிவஸ்ரீ பிச்சைக்குருக்கள் முன்னிலையில் இதர விஷேச வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா, அவர்தம் துணைவியார் புவான்ஸ்ரீ மல்லிகா, அறங்காவல் டத்தோ என். சிவகுமார் மற்றும் தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு பூசைகளுக்கு ன் பின்னர் ஆலயத்தின் தங்க கோபுரத்தில் அம்மன் சந்நதியில் தங்க கலசம் பொருத்தும் பணி நடைபெற்றது. தவிர காலை 9 மணி முதல் இரவு வரை பக்தர்கள் தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் வைத்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


