பெத்தாலிங் ஜெயா,ஜன.31
கடந்த 2020 ஆம் ஆண்டு கெடா மந்திரி பெசார் சனுசி முகம்மாட் Toyota Vellfire வகை காரை வாங்கியதாக கெடா மாநில நம்பிக்கைக் கூட்டணி தலைவர் மஹ்ஃபுஸ் ஓமார் குற்றஞ்சாட்டினார். அது பொய்யானக் குற்றச்சாட்டு என அலோர ஸ்டார் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு சனுசிக்கு மஹ்ஃபுஸ் ஓமார் இரண்டரை லட்சம் வெள்ளி இழப்பீடு கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 14 நாட்களில் சனுசியிடம் மஹ்ஃபுஸ் ஓமார் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மஹ்ஃபுஸ் இன் வழக்கறிஞர் ஃபாயிஸ் ஃபட்சில் தெரிவித்தார்.
இருப்பினும்,மஹ்ஃபுஸ்இன் தரப்பு, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கைக் கொண்டு செல்வதால், மன்னிப்புக் கோரல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவூம் தெரிவிக்கப்பட்டது.








