Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கோரிக்கையை விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோரிக்கையை விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர்

கோலாலம்பூர், ஜூன்.08-

பெட்ரோனாஸ் மீது ஒரு விரிவான தணிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற அம்னோ இளைஞர் பிரிவின் கோரிக்கையை விமர்சித்துள்ளார் முன்னாள் சட்ட அமைச்சர் ஸையிட் இப்ராஹிம். தேசிய எண்ணெய் நிறுவனத்தையும் நாட்டின் நீண்ட கால எரிசக்தி உத்திகளையும் பாதிக்கும் மிக அவசரமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.

தணிக்கைக்கானத் தெளிவான, குறிப்பிட்ட கவலைகள் இல்லாவிட்டால், அத்தகைய நடவடிக்கை தேவையற்றது என்றும், முக்கியமான விவகாரங்களிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் என்றும் ஸையிட் இப்ராஹிம் கூறினார். பெட்ரோனாஸ் இனி உலக எரிசக்தி சந்தையில் திறம்பட போட்டியிட முடியாத அளவுக்கு நிறுவனத்தைப் பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →