மலேசிய மண்ணில் மலாய்க்காரர்கள் பிளவுப்பட்டு, அவர்களின் நலன் சார்ந்த அரசியல் கட்சிகள் ஒன்றுப்படவில்லை என்றால் நாட்டின் அமைதி என்பது இல்லை என்ற பேருண்மையை சீனர்களும், இந்தியர்களும் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும்,முவாஃபகட் நெஷ்னல் தலைவர் தான் ஶ்ரீ அனுவார் மூசா நினைவுறுத்தியுள்ளார்.சீனர்கள் இன்று ஒன்றுபட்டு, ஒற்றுமைப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த நாட்டில் பெரும்பான்மை ஜனத்தொகையை கொண்டுள்ள மலாய்க்காரர்கள், அரசியல் ரீதியாக பிளவுகளையும், பேதங்களையும் விதைத்துக்கொண்டு, பகைமை உணர்வை பாராட்டி வருகிறார்கள். இந்த நிலைமை தொடருமானால், அதனால், ஆட்சிக் கட்டிலில் அதரக்கூடிய, ஆதாயம் பெறக்கூடிய சமூகமாக யார் இருப்பார்கள் என்பதை மலாய்க்காரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கிளந்தான் கெதெரெஹ் முன்னாள் எம்.பி.யான அனுவார் மூசா கேட்டுக்கொண்டுள்ளார்.