May 5, 2026
Thisaigal NewsYouTube
கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!
தற்போதைய செய்திகள்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

Share:

கூலிம், மே.05-

கூலிம் மாவட்டத்தில் கூலிம் கிளப் எனும் இடத்தில் நிகழ்ந்த கைகலப்பில் பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஆயுதத்தைப் பயன்படுத்தி ஆடவர் ஒருவரைத் தாக்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருப்பதாக கெடா மாநில போலீஸ் தலைமை அதிகாரி டத்தோ அட்ஸ்லி பின் அபு ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் 55 வயதுடைய ஆடவர் ஒருவர் கூலிம் கிளப் வளாகத்தில் இருந்துள்ளார். திடீரென்று பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற் உறுப்பினரும் கூலிம் கிளப்பின் தலைவருமான அந்நபர், மண்டபத்தின் நுழைந்து அவ்வாடரை நோக்கி "எதற்காக மண்டபத்தி்ல் நுழைந்துள்ளாய்" என வினவியுள்ளார். அதோடு ஒரு கத்தியைக் கொண்டு அவ்வாடவரின் இடது கை வெட்டியதுடன் அவரின் முகத்தில் குத்தி மிரட்டலும் விடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அந்த பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் காயமடைந்த நபரும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர் .

பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றவியல் சட்டம் 324 மற்றும் 506 ஆகிய இரு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் கூலிம் கிளப் தலைவர் என்ற முறையில் பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கிய புகாரின் அடிப்படையில் வெட்டுப்பட்ட ஆடவர் குற்றவியல் சட்டம் 323/379 கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக கெடா மாநில போலீஸ் தலைமை அதிகாரி டத்தோ அட்ஸ்லியை திசைகள் தொடர்பு கொண்ட போது அவர் கூறினார்.

ஆகவே, மேல் விசாரணைக்காக இருவரையும் தடுப்புக் காவலில் வைக்க நாளை கூலிம் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும் என டத்தோ அட்ஸ்லி குறிப்பிட்டார்.

Related News