Jul 28, 2026
Thisaigal NewsYouTube
எதிர்வாதம் புரியும்படி முன்னாள் குத்தகையாளருக்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

எதிர்வாதம் புரியும்படி முன்னாள் குத்தகையாளருக்கு உத்தரவு

Share:

கோலாலம்பூர்,பிப்.8
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தனது மனைவியை மூச்சடைக்கச் செய்து, கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த முன்னாள் குத்தகையாளர் ஒருவர், எதிர்வாதம் புரியும்படி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

50 வயது Chua Chin Hoe என்ற அந்த குத்தகையாளருக்கு எதிரான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதை பிராசிகியூஷன் தரப்பு நிரூபித்து இருப்பதால் தனது தரப்பு வாதத்தை சமர்ப்பிக்கும்படி அந்த குத்தகையாளருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி உத்தரவு பிறப்பித்தார்.

சம்பந்தப்பட்ட குத்தகையாளர் கடந்த 2021 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் கோலாலம்பூர்,ஸ்தாப்பாக், ஜாலான் கெந்திங் க்லாங்கில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் தனது 46 வயது மனைவியை மூச்சடைக்கச் செய்து கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Related News