Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஆகஸ்ட் 24 ஆம் தேதி மலாக்காவிற்கு பொது விடுமுறை
தற்போதைய செய்திகள்

ஆகஸ்ட் 24 ஆம் தேதி மலாக்காவிற்கு பொது விடுமுறை

Share:

மலாக்கா, ஜூன் 04-

மலாக்கா ஆளுநர், துன் முகமது அலி ருஸ்தம் பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி மலாக்கா மாநிலத்திற்கு சிறப்பு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பொது விடுமுறையையொட்டி அன்றைய தினம், மலாக்கா வாசிகள் மற்றும் நிரந்த வசிப்பிடவாசிகள் அனைவருக்கும், மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்கள், இலவசமாக திறந்து விடப்படும் என்று மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ரவுஃப் யூசோ தெரிவித்தார்.

மலாக்காவில் கோம்ப்ளக்ஸ் செரி நெகிரி, பாலாய் இஸ்தியடாத்- டில் இன்று செவ்வாய்க்கிழமை, துன் முகமது அலி ருஸ்தம், மலாக்கா ஆளுநராக இரண்டாவது தவணையாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்ட சடங்கில் முதலமைச்சர் ரவுஃப் யூசோ உரையாற்றுகையில், மலாக்கா வாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சிறப்பு பொது விடுமுறையை அறிவித்தார்.

Related News