Jul 28, 2026
Thisaigal NewsYouTube
வாழைத்தாரை திருடிய நபர் ஒருவருக்கு 1 மாதச் சிறை
தற்போதைய செய்திகள்

வாழைத்தாரை திருடிய நபர் ஒருவருக்கு 1 மாதச் சிறை

Share:

கோலா திரங்கானு, மே 06-

வாழைத்தாரை திருடிய குற்றத்திற்காக வேலையில்லா நபர் ஒருவருக்கு 30 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்க கோலா திரங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

44 வயது வான் முஸ்தபா வான் அப்துல் ரஹ்மான் என்கிற அந்த நபர் மாஜிஸ்திரேட் நூர் மஸ்ரினி மஹ்மூத் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டு அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதை அடுத்து இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் 379 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் திரெங்கானு,மநிர், கம்போங் பெலாடௌ கோலமில் உள்ள ஒரு வீட்டில் முதியவருக்கு சொந்தமான வாழைத்தாரை திருடியதாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அந்நபருக்கு சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்