Jul 27, 2026
Thisaigal NewsYouTube
காதலியால் கத்தி குத்துக்கு ஆளாகிய ஆடவர்
தற்போதைய செய்திகள்

காதலியால் கத்தி குத்துக்கு ஆளாகிய ஆடவர்

Share:

கோத்தா பாரு, ஏப்ரல் 03-

கோலா க்ராய், டத்தாரான் லெமாங் மாநெக் உராய்-யில் உள்ள ஒரு பொதுக் கழிவறைக்கு முன், காதலியால் மூன்று முறை வயிற்றில் குத்தப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் கிடைக்கப் பெற்றதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகம்மது சாக்கி ஹாரூன் தெரிவித்தார்.

28 வயதுடைய அப்பெண் காய்கறி வெட்டும் கத்தியை பயன்படுத்தி தனது 45 வயதுடைய காதலனை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. கொலை புரிந்த குற்றத்திற்காக அப்பெண்ணை கைது செய்ததாக முகம்மது சாக்கி கூறினார்.

சுங்கை தொங் செத்தியு திறங்காணு-விலிருந்து கோலா க்ராய்-யில் உள்ள சில இடங்களுக்கு பாதிக்கப்பட்டவர் அப்பெண்ணை அழைத்து வந்திருந்த வேளையில் இக்கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக முகம்மது சாக்கி தெளிவுப்படுத்தினார்.

அப்பெண்ணுடன் உடலுறவில் ஈடுப்பட்டிருந்த போது அவ்வாடவர் கத்தி குத்துக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முகம்மது சாக்கி மேலும் விளக்கமளித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்