Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நிவாரண மையங்களில் 40 ஆயிர​ம் தஞ்சம்
தற்போதைய செய்திகள்

நிவாரண மையங்களில் 40 ஆயிர​ம் தஞ்சம்

Share:

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களை சேர்ந்த 40 ஆயிரத்து 922 பேர், நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகக்கடைசியாக வெள்ளத்தினால் சிலாங்​கூ​ர் மாநிலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரத்தின்படி 37 ஆயிரத்து 322 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாவட்டங்களில் 238 நிவாரண மையங்கள் ​திறக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில பேரிடர் நிர்வாக மேலாண்மைக்குழு அறிவித்துள்ளது.

Related News